23rd November 2025
மாவனெல்ல கணதென்னவில் 2025 நவம்பர் 22 அன்று பாறைகள் நிறைந்த மண் மேடு இடிந்து விழுந்ததில் ஒரு கடை மற்றும் அருகிலுள்ள வீடு இடிந்து விழுந்ததில் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கிகொண்டனர்.
57 வது காலாட் படைப்பிரிவின் 611 வது காலாட் பிரிகேட் கீழ் உள்ள 8 வது இலங்கை சிங்க படையணியின் 45க்கும் மேற்பட்ட படையினர் கேகாலை அனரத்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பலர் மீட்கப்பட்டு மாவனெல்ல தள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.