23rd November 2025
இந்திய இராணுவத்திற்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையிலான இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் கூட்டுறவு இராணுவ உறவை மேலும் வலுப்படுத்த 11வது இராணுவ-இராணுவ பணிநிலை கலந்துரையாடல் 2025 நவம்பர் 18 முதல் 20 வரை இந்தியாவின் கயாவில் உள்ள அதிகாரிகள் பயிற்சி கல்வியற்கல்லூரியில் நடாத்தப்பட்டது.
இக் கலந்துரையாடலில் இலங்கை இராணுவத்தின் பொதுப் பணிநிலை பணிப்பாளர் நாயகம் உட்பட் ஆறு பேர் கொண்ட இலங்கை இராணுவ குழு இந்திய இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் குழுவுடன் கலந்து கொண்டனர். சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் மேலதீக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஆகாஷ் ஜோஹர் ஏவீஎஸ்எம் அவர்கள் தலைமையில் இந்திய இராணுவத்தின் ஏழு பேர் கொண்ட சிரேஷ்ட குழுவுடன், இலங்கை இராணுவத்தின் பொதுப் பணிநிலை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடப்ளியூசீ பீஎஸ்சீ அவர்களுடன் ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஏ.எம்.சி.பீ. விஜேரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, தகவல் தொழில்நுட்ப பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் எஸ்.ஜே.கே.டி. ஜயவர்தன யூஎஸ்பீ பீஎஸ்சீ, திட்டமிடல் பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் ஏ.கே.பீரிஸ் ஆர்எஸ்பீ, பயிற்சி பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் பி.எ.டி.ஆர்.ஏ.சி விஜேசேகர ஆர்எஸ்பீ சீடீஎஸ்.என்டியூ யூஎஸ்ஏசீஜீஎஸ்சீ ஆகிய பிரதி நிதிகளுடன் முன் திட்டமிடல் மற்றும் செயற்படுதல் பணிப்பக கேணல் யூ.என்.ஜீ. கருணாரத்ன ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஆகியோர் கலந்து கொண்டனர்.
புத்தகயாவில் பணியாளர்கள் பேச்சுவார்த்தை மிகவும் அடையாளப்பூர்வமாக நடத்தப்பட்டதுடன் குறிப்பாக அவர்களினால் பகிரப்பட்ட பௌத்த பாரம்பரியத்தின் மூலம் இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் ஆழமான வரலாற்று, கலாசார மற்றும் ஆன்மீக உறவுகளை பிரதிபலிக்கிறது. இந்த கலந்துரையாடல் இரு படைகளும் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபடுவதற்கும், தற்போதைய ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்வதற்கும், ஒத்துழைப்பின் புதிய வழிகளை அடையாளம் காண்பதற்கும், பயிற்சி, கூட்டுப் பயிற்சிகள், திறன் மேம்பாடு மற்றும் மூலோபாய அளவிலான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட தற்போதைய இராணுவ இராஜதந்திரம், கலாசார உறவுகள் மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கும் ஒரு விலைமதிப்பற்ற தளத்தை வழங்கியது.
கலந்துரையாடல்களின் முடிவில், 11வது இராணுவ-இராணுவ பணிநிலை கலந்துரையாடல் குறிப்புகள் இரு இணைத் தலைவர்களாலும் முறையாக கையெழுத்திடப்பட்டதுடன் இது இருதரப்பு இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டைக் குறிக்கிறது. 2026 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவிருக்கும் 12வது இராணுவ-இராணுவ பணிநிலை கலந்துரையாடலில் பங்கேற்க இந்திய இராணுவத்திற்கு இலங்கை இராணுவம் அதிகாரப்பூர்வ அழைப்பை விடுத்தது.
இந்த விஜயத்தின் போது, இலங்கை தூதுக்குழு புனித மகாபோதி விகாரை, 80 அடி புத்தர் சிலை, புத்தகயா, புத்தகயாவின் ரகசியங்கள் மற்றும் பீகார் அருங்காட்சியகம் ஆகியவற்றிற்கு கலாசார மற்றும் வரலாற்று விஜயங்களை மேற்கொண்டதுடன் இது விஜயத்தை மேலும் வளப்படுத்தி இரு நாடுகளுக்கும் இடையிலான பகிரப்பட்ட ஆன்மீக மற்றும் நாகரிக பாரம்பரியத்தை வலுப்படுத்தியது.