விஜயபாகு காலாட்படை கருத்தரங்கு 2025 விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது

விஜயபாகு காலாட்படை கருத்தரங்கு – 2025, போயகனை விஜயபாகு காலாட்படை படையணி தலைமையகத்தில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் தலைமையில் 2025 நவம்பர் 22 அன்று நடைபெற்றது.

பிரதம விருந்தினரை படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், வரவேற்பு உரையை படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச். பண்டாரநாயக்க யூஎஸ்பீ நிகழ்த்தியதுடன் அதைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.பி. அலுவிஹாரே (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

இந்தக் கருத்தரங்கு இரண்டு தொழில்நுட்ப அமர்வுகளைக் கொண்டிருந்ததுடன் இதன் போது தொழின்முறை அறிவு மற்றும் செயற்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இராணுவம் தொடர்பான பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய தொடர் சொற்பொழிவுகளை பாட வல்லுநர்கள் வழங்கினர்.

நிகழ்வின் போது, விருந்தினர் பேச்சாளர்களுக்கு அவர்களின் பங்களிப்புகளைப் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் மேலும் நிகழ்வை நினைவுகூரும் வகையில் நினைவுப் பரிசில்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் இறுதி உரையுடன் நிகழ்வு நிறைவடைந்து.

இந்த நிகழ்விற்கு இணையாக, படையணியின் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரிகள் தங்குமிட வளாகத்தின் திறப்பு விழா, விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது. கருத்தரங்கின் முதல் அமர்வுக்குப் பிறகு, இராணுவத் தளபதி சிப்பாய்கள் தங்குமிடங்கள் பகுதி உட்பட முகாம் வளாகத்தை பார்வையிட்டார்.