22nd November 2025
இலங்கை-இந்தியா இருதரப்பு இராணுவப் பயிற்சியின் 11வது மித்ர சக்தி பயிற்சியில் பங்கேற்ற இலங்கை இராணுவக் குழு, இந்தியாவின் கர்நாடக பெலகாவியில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் 2025 நவம்பர் 10 முதல் 22 வரை நடத்தப்பட்ட பயிற்சி திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் 2025 நவம்பர் 22 அன்று நாடு திரும்பியது.
இந்தப் பயிற்சியில் 125 இலங்கை இராணுவ வீரர்களும் 10 இலங்கை விமானப்படை வீரர்களும் பங்குபற்றினர். இரு படைகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு, கலாசார புரிதல் மற்றும் நட்புறவை மேம்படுத்துவதற்கு இந்தப் பயிற்சி ஒரு பயனுள்ள தளத்தை வழங்கியது.
நாடு திரும்பிய படையினர் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். ஏர் மொபைல் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டபிள்யூ.ஏ.ஜே. ஹேமச்சந்திர ஆர்எஸ்பீ எச்டிஎம்சி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் காலாட்படை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டீ.எஸ் ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசீ, இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் மன்தீப் சிங் நேகி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இந்த குழுவினரை வரவேற்றனர்.