22nd November 2025
2025 நவம்பர் 20 அன்று பெய்த கனமழையால் வெல்பல்லாவில் உள்ள ரத்மல் ஓயா கரை சேதமடைந்து, கிட்டத்தட்ட 20 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
இரண்டு நாட்களில் இராணுவத் படையினர் விரைவாக மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொண்டதுடன், மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி கால்வாய் கரையை வலுப்படுத்தினர். படையினரின் விரைவான ஈடுபாடு மேலும் அரிப்பைத் தடுத்ததுடன் சேதத்தைக் கட்டுப்படுத்தியது.
இது அனர்த்த முகாமைத்துவ மையம், பிரதேச செயலகம் மற்றும் தொடர்புடைய மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரிகளால் திறம்பட ஒருங்கிணைக்கப்பட்டது.