19th November 2025
ரணவிரு வள மையம், அதன் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு நிதி முகாமைத்துவம் குறித்த விரிவுரையை ரணவிரு வள மைய வளாகத்தில் 2025 நவம்பர் 12 அன்று நடாத்தியது.
இந்த அமர்வை நேர்மறை சிந்தனை மற்றும் மன அழுத்த முகாமைத்துவம் தொடர்பான தேசிய பயிற்சியாளரும் விரிவுரையாளருமான திருமதி அமா திசாநாயக்க அவர்கள் நிகழ்த்தினார்.
முப்படைகளை சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த விரிவுரையில் பங்கேற்றனர்.