17th November 2025
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 நவம்பர் 14 ஆம் திகதி இலங்கை இராணுவ தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலைக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.
பயிற்சிப் பாடசாலைக்கு வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் தளபதி கேணல் டி.எஸ்.பி.ஆர். பெர்னாண்டோ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் படையினரால் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் தளபதியினால் பயிற்சிப் பாடசாலையின் தற்போதைய கல்வி மற்றும் கல்விசாரா செயற்பாடுகள் குறித்து தளபதிக்கு விளக்கப்பட்டது. பின்னர் அவர் இலங்கை இராணுவ தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் படையினருக்கு உரையாற்றியதுடன், விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் தனது பாராட்டுக்களை பதிவிட்டார்.
இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.