17th November 2025
நாரம்மல, தெமட்டகஹவெலவில் வசிக்கும் ஓர் ஏழை குடும்பத்திற்கு உபகரணங்களுடன் முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டொன்று சம்பிரதாயத்திற்கமைய கையளிக்கப்பட்டது. ரொஷான் மஹாநாம அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில் திரு. ஏ.பி. டீன் அவர்களின் தாராளமான நிதி பங்களிப்பின் மூலம், 571 காலாட் பிரிகேட்டின் கீழ் உள்ள 1வது பொறியியல் சேவைகள் படையணி மற்றும் 9வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரின் உதவியுடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு 2025 நவம்பர் 13 அன்று புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரும் ரொஷன் மஹாநாம அறக்கட்டளையின் நிறுவனருமான திரு. ரொஷன் மஹாநாம மற்றும் அவரது துணைவியார், திரு. ஏ.பி. டீன் மற்றும் அவரது துணைவியார் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது. மேஜர் ஜெனரல் குமுது பெரேரா (ஓய்வு), சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.