17th November 2025
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் அதன் 13 வது ஆண்டு நிறைவு விழாவை 2025 நவம்பர் 15 ஆம் திகதி தொடர்ச்சியான நிகழ்வுகளுடன் கொண்டாடியது.
ஆண்டு நிறைவை முன்னிட்டு, சன்ஹிந்த சிறுவர் இல்லத்தில் அன்னதானம் மற்றும் எழுதுபொருட்கள் நன்கொடையாக வழங்கும் நிகழ்வு நடைபெற்றது, அதே நேரத்தில் கெந்தலந்த விளையாட்டு மைதானத்தில் கட்டளையின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதே நேரத்தில், மஹாரகம புற்றுநோய் மருத்துவமனையின் ஒருங்கிணைப்புடன் போதிராஜராமய விகாரையில் இரத்த தானம் நடத்தப்பட்டது. பின்னர், வீரமரணம் அடைந்த போர் வீரர்கள், மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் அனைத்து நிலையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆசிர்வாதம் வேண்டி போதி பூஜை நடத்தப்பட்டது.
ஆண்டு நிறைவு நாளில், மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ. உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து மர நடுகை மற்றும் குழு படம் எடுத்தல் போன்றவை இடம்பெற்றன.
பின்னர், தளபதி மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அனைத்து சிவில் ஊழியர்களுக்கும் பரிசுப் பொதிகளை வழங்கினார். பின்னர் அவர் அனைத்து நிலையினருடன் மதிய உணவிருந்தில் கலந்து கொண்டதுடன் படையினருக்கு உரையும் ஆற்றினார். ஆண்டு நிறைவு நாள் நிகழ்வுகளில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.