இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி 2வது இலங்கை ரைபில் படையணிக்கு விஜயம்

இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 நவம்பர் 15 ஆம் திகதி 2 வது இலங்கை ரைபிள் படையணிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு 2 வது இலங்கை ரைபிள் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து, 2 வது இலங்கை ரைபிள் படையணியின் கட்டளை அதிகாரி, படையணியின் தற்போதைய பொறுப்புகள் மற்றும் செயல்பாட்டு ஈடுபாடுகள் குறித்த விரிவான விளக்கத்தை வழங்கினார்.

சிரேஷ்ட அதிகாரி, நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தும் வழிமுறையாக இராணுவம் மற்றும் பொதுமக்கள் துறைகளில் சுயஉணர்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி படையினருக்கு உரையாற்றினார். பின்னர், இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஒரு மரக்கன்றை நாட்டினார்.

விஜயத்தின் நிறைவில், தளபதி முகாம் வளாகத்தை பார்வையிட்டதுடன், அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.