கெமுனு ஹேவா படையணியின் புதிய படைத் தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஏ. அபேவர்தன டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் கெமுனு ஹேவா படையணியின் 26 வது படைத் தளபதியாக 2025 ஒக்டோபர் 23 ஆம் திகதி குருவிட்ட படையணி தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்றார்.

சிரேஷ்ட அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் வீரமரணமடைந்த போர் வீரர்களின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தியதுடன், அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டு படையினருக்கு உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.