ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

கொமாண்டோ பிரிகேட் தளபதி மேஜர் ஜெனரல் கே.வி.ஐ.எல். ஜயவீர யூஎஸ்பீ அவர்கள் 33 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 நவம்பர் 13 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:

மேஜர் ஜெனரல் கே.வி.ஐ.எல். ஜயவீர யூஎஸ்பீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பயிலிளவல் அதிகாரியாக 1992 ஜூலை 24 ஆம் திகதி இணைந்தார். பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் தியத்தலாவை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர், 1993 ஏப்ரல் 15 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் இராணுவ கொமாண்டோ படையணியில் நியமிக்கப்பட்டார். தனது இராணுவ பணிக்காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர், 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2025 நவம்பர் 22 ஆம் திகதி தனது 55 வயதை அடைந்ததும் இலங்கை இராணுவ நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார்.

சிரேஷ்ட அதிகாரி தனது பணிக்காலத்தில், 1 வது கொமாண்டோ படையணியின் அணி கட்டளையாளர், கொமாண்டோ படையணி பயிற்சிப் பாடசாலை பயிற்றுவிப்பாளர், 1 வது கொமாண்டோ படையணியின் அணி கட்டளையாளர், 4 வது கொமாண்டோ படையணியின் அதிகாரி கட்டளை (நிர்வாகம்), இராணுவத் தலைமையக இராணுவத் தளபதி பாதுகாப்புக் குழுவின் கட்டளை அதிகாரி, 2 வது கொமாண்டோ படையணியின் செயற்பாடுகள் மற்றும் பயிற்சி அதிகாரி, கொமாண்டோ படையணி விஷேட போர் பயிற்சி பாடசாலையில் தலைமை பயிற்றுவிப்பாளர், 1 வது கொமாண்டோ படையணியின் இராண்டாம் கட்டளை அதிகாரி, 56 வது காலாட் படையணியின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயற்பாடுகள்), அபேய்க்கான ஐக்கிய நாடுகளின் இடைக்கால பாதுகாப்புப் படையின் இராணுவ கண்காணிப்பாளர், கொமாண்டோ படையணி தலைமையகத்தின் பொதுபணி நிலை அதிகாரி, 1 வது கொமாண்டோ படையணியின் கட்டளை அதிகாரி, 24 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் பொது பணிநிலை அதிகாரி 1 (நடவடிக்கை), கொமாண்டோ படையணி நிலையத்தின் பிரதி தளபதி, 613 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் கொமாண்டோ பிரிகேட் தளபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

இலங்கை இராணுவத்திற்கு அவர் செய்த அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலான சேவையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு உத்தம சேவை பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

படையலகு தளபதிகள் தந்திரோபாய பாடநெறி, அடிப்படை கொமாண்டோ பாடநெறி, உயர் கொமாண்டோ பாடநெறி, படையலகு ஆதரவு ஆயுத அதிகாரிகள் பாடநெறி,அடிப்படை பரசூட் பயிற்சி பாடநெறி, சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் பயிற்றுவிப்பாளர் பயிற்சி பாடநெறி,கடத்தல் எதிர்ப்பு மற்றும் பணயக்கைதிகள் மீட்பு பாடநெறி, கண்காணிப்பாளர் மற்றும் பணியாளர் அதிகாரிகள் பாடநெறி உள்ளிட்ட ஏராளமான உள்நாட்டு பாடநெறிகளை அவர் வெற்றிகரமாக முடித்துள்ளார்.

வெளிநாடுகளில் அவர், அதிகாரி பயிலிளவல் பயிற்சி பாடநெறி – பாகிஸ்தான், பயிலிளவல் பாடநெறி – இந்தியா, இளம் அதிகாரிகள் தந்திரோபாய பாடநெறி - பாகிஸ்தான், கொமாண்டோ பாடநெறி – இந்தியா, எதிர்ப்பு கிளர்ச்சி மற்றும் வன போர் பாடநெறி – இந்தியா, கனிஷ்ட கட்டளை பாடநெறி – இந்தியா, முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பாடநெறி - பாகிஸ்தான், சிரேஷ்ட கட்டளை பாடநெறி – இந்தியா, போன்ற பாடநெறிகளையும் பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.