12th November 2025
2025 டிசம்பர் 09 ஆம் திகதிக்கு திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்திற்கான தயாரிப்புகளை இறுதி செய்வதற்கும், தற்போதைய ஊழல் எதிர்ப்பு முயற்சிகளை மதிப்பிடுவதற்கும், உள்ளக விவகாரப் பிரிவு அதன் 3வது காலாண்டிற்கான மதிப்பாய்வு கூட்டத்தை 2025 நவம்பர் 11 ஆம் திகதி இராணுவ பதவி நிலை பிரதானி அலுவலகத்தில் நடாத்தியது.
இந்தக் கூட்டத்திற்கு இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியும், உள்ளக விவகாரப் பிரிவின் தலைவருமான மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் தலைமை தாங்கினார். முறையீடுகளின் சுருக்கத்தை அமர்வு மதிப்பாய்வு செய்ததுடன், முறையீடளிக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் நிறுவனத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை நிலைநிறுத்துவதற்கு பொருத்தமான முறையில் தீர்க்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தியது.
ஊழல் எதிர்ப்பு முயற்சி மதிப்பீடு, விழிப்புணர்வு திட்டங்கள், நடத்தை விதிகளை அமல்படுத்துதல் மற்றும் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகங்களுடன் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
"வெளிப்படையான மற்றும் பொறுப்புணர்வுள்ள இராணுவ கலாசாரத்திற்கான நிறுவன ஒருமைப்பாடு" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு வரவிருக்கும் ஊழல் எதிர்ப்பு தினத்திற்கான திட்டங்கள், நெறிமுறை நடத்தை மற்றும் நல்லாட்சிக்கான இராணுவத்தின் அர்ப்பணிப்பை வலுப்படுத்த நாடு முழுவதும் உள்ள படையணிகளில் விரிவுரைகள், சுவரொட்டிகள் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடாத்தப்படவுள்ளன.