12th November 2025
மேஜர் ஜெனரல் எஸ்ஏயூஏ சோலங்கராச்சி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 நவம்பர் 10 அன்று படைப்பிரிவில் இடம்பெற்ற நிகழ்வின் போது 56 வது காலாட் படைப்பிரிவின் 31 வது படைத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.
வருகை தந்த தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அவரது புதிய நியமனத்திற்கு ஆசிர்வாதம் வேண்டி மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றன.
அவர் தனது உரையில் தொழில் நிபுணத்துவம், ஒழுக்கம் மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்பை வலியுறுத்தி படைப்பிரிவுக்கான தனது எதிர்கால திட்டங்களை சுட்டிக்காட்டினார். அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்துடன் அதனைத் தொடர்ந்து படைப்பிரிவின் நிர்வாக பொறுப்புகள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்த விளக்கமும் வழங்கப்பட்டது.