12th November 2025
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, 11 வது காலாட் படைப்பிரிவின் படையினர், 2025 நவம்பர் 5 ஆம் திகதி பல்லேகலை கைதொழில் பேட்டையிலுள்ள சக்தி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீயை உடனடியாக கட்டுப்பாட்டுகுள் கொண்டு வர நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
18 இராணுவத்தினர் கொண்ட குழுவினர், தண்ணீர் பவுசருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இலங்கை விமானப்படை, பொலிஸ் மற்றும் தீயணைப்பு படையினரின் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் தீயை அணைப்பதில் தீவிரமாக முயற்சியை மேற்கொண்டனர்.