அம்பலாங்கொடை நகரில் ஏற்பட்ட தீ இராணுவத்தினரின் உதவியுடன் அணைப்பு

அம்பலாங்கொடை பிரதேச சபைக்குச் சொந்தமான கட்டிடத்தில் அமைந்துள்ள ஒரு மின் உபகரணக் கடையில் 2025 நவம்பர் 09 அன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்து மேலும் 12 கடைகளுக்கும் பரவியதுடன், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 வது காலாட் படைப்பிரிவு கீழ் இயங்கும் 573 வது காலாட் பிரிகேடினரால் தீவிர நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமாக தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

573 வது காலாட் பிரிகேட்டின் வழிகாட்டுதலின் கீழ், 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 2வது (தொ) கெமுனு ஹேவா மற்றும் 573 வது காலாட் பிரிகேட் படையினரால் காலி அனர்த்த முகாமைத்துவ நிலையம், காலி தீயணைப்புப் படை, இலங்கை கடற்படை தீயணைப்புப் பிரிவு, அம்பலாங்கொடை நகர சபை, பொலிஸ் மற்றும் விஷேட அதிரடி படையினருடன் இணைந்து தீயை அணைக்கும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.