11th November 2025
இராணுவத் தலைமையகத்தின் நிதி முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் நாயகமான மேஜர் ஜெனரல் கேடிஎம்எல் சமரதிவாகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் கரந்தெனிய படையணி தலைமையகத்தில் நடைபெற்ற கௌரவ விழாவில், இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் படைத் தளபதியாக 2025 நவம்பர் 07 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.
வளாகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து நிலைய தளபதி பிரிகேடியர் எஸ்எம்சீஏஎஸ் சமரதுங்க ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட அழைத்து சென்றதை தொடர்ந்து பாரம்பரிய மரியாதை அணிவகுப்பு செலுத்தப்பட்டது.
பின்னர், சிரேஷ்ட அதிகாரி தனது புதிய அலுவலகத்தில் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் முறையாக கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். அனைவருக்கும் உரையாற்றிய அவர், படையணியின் முக்கியத்துவம், இலங்கை இராணுவத்திற்கு அதன் முக்கிய பங்களிப்புகள் மற்றும் தேசிய வளர்ச்சியில் அதன் பங்கு ஆகியவற்றை எடுத்துரைத்தார். இராணுவ சிறப்பின் ஒரு மூலக்கல்லாகவும், படையணி நோக்கங்களை அடைவதில் ஒரு முக்கிய காரணியாகவும் ஒழுக்கத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தை அவர் மேலும் வலியுறுத்தினார்.
உரையைத் தொடர்ந்து, புதிய படைத் தளபதி இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் அனைத்து நிலையினருடன் தேநீர் விருந்தில் கலந்துகொண்டார். இதன்போது அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் அன்பான உரையாடலில் ஈடுபட்டார்.
நிகழ்வில் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணி பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.