கோப்பிவத்தயில் ரூ.8 மில்லியன் பெறுமதியான வல்லப்பட்டையுடன் மூவர் கைது

கோப்பிவத்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவலைப்பின் போது சுமார் ரூ.8 மில்லியன் பெறுமதியான வல்லப்பட்டையுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் விஷேட அதிரடி படை அதிகாரிகளால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது சந்தேக நபரிடம் இருந்து 15.750 கிராம் வல்லப்பட்டை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம வனத்துறை அலுவலகம், பொலிஸ் விஷேட அதிரடி படை மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் மேற்கொண்டு வருகிறது.