9th November 2025
இலங்கை-இந்தியா இடையேயான 11வது இருதரப்பு இராணுவப் பயிற்சியான “மித்ர சக்தி பயிற்சி” 2025 நவம்பர் 10 முதல் 23 வரை இந்தியாவின் கர்நாடக பெலகாவியில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் (FTN) நடைபெற உள்ளது.
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 125 பணியாளர்களையும், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 10 பணியாளர்களையும் கொண்ட இலங்கைப் படையினர் குழுவிற்கு ஏயர் மொபைல் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டபிள்யூ.ஏ.ஜே. ஹேமச்சந்திர ஆர்எஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் தலைமை தாங்குவார்.
இந்தப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் இன்று இக்குழு இந்தியாவுக்குப் புறப்பட்டது.
இந்தப் பயிற்சி, இரு நட்பு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையேயான தொடர்பு, பரஸ்பர புரிதல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் கஜபா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் யு.கே.டி.டி.பீ. உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, காலாட்படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.என்.கே.டி. பண்டார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.