பார்வை இழந்த இராணுவ வீரரால் படைக்கப்பட்ட செரண்டிப் உலக சாதனைக்கு கஜபா படையணியில் பாராட்டு

76 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு செரண்டிப் உலக சாதனை படைத்த காலாட் படை வீரரான சிப்பாய் ஆர்டபிள்யூவீ பியதிஸ்ஸ அவர்களை கௌரவிக்கும் வகையில் 2025 நவம்பர் 03, அன்று "கஜபா இல்லத்தில்" ஒரு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

பார்வை இழந்த காலாட் படை வீரரான சிப்பாய் ஆர்டபிள்யூவீ பியதிஸ்ஸ அவர்களின் தைரியம், சகிப்புத்தன்மை மற்றும் உறுதிப்பாட்டை கஜபா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டபிள்யூபீ. ஆர்எஸ்பீ, யூஎஸ்பீ, என்டிசீ, பீஎஸ்சீ அவர்கள் பாராட்டினார். அதன் பின்னர் அவரின் ஊக்கமளிக்கும் பயணம் மற்றும் சாதனைகளை எடுத்துக்காட்டும் சிறப்பு வீடியோகாட்சி காண்பிக்கப்பட்டது.

பாராட்டு தெரிவிக்கும் விதமாக, காலாட் படை வீரரான சிப்பாய் ஆர்டபிள்யூவீ பியதிஸ்ஸ அவர்களுக்கு பெறுமதியான பரிசுகளையும் நினைவுப் பரிசையும் படையணியின் படைத் தளபதி அவர்கள் வழங்கினார், அதே நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் நன்றியுணர்வின் சின்னங்கள் வழங்கப்பட்டன.