6th November 2025
பிரிகேடியர் எம்எல்டிஎஸ் மொல்லிகொட யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தின் 48வது தளபதியாக 2025 ஒக்டோபர் 31 அன்று சுருக்கமான நிகழ்வின் போது கடமை பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், புதிய தளபதி முகாம் வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்ததுடன், குழு படம் எடுத்து கொண்டார். கட்டளை அதிகாரி, தலைமை பயிற்றுவிப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.