2nd November 2025
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் தனது 22வது ஆண்டு நிறைவை 2025 அக்டோபர் 31 அன்று வெலிகந்தையில் உள்ள தலைமையக வளாகத்தில் கொண்டாடியது.
ஆண்டு நிறைவு விழாவையொட்டி, கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் அனைத்துப் பணியாளர்களுக்கும் ஆசீர்வாதம் வேண்டி, 2025 அக்டோபர் 24 முதல் 25 வரை மட்டக்களப்பில் உள்ள சோமாவதி மகா சேயா, புனித மேரி தேவாலயம், மாமாங்கேவர கோவில் இந்து கோவில் மற்றும் அல் லக்ஷா மசூதி ஆகிய இடங்களில் தொடர்ச்சியான மத அனுஷ்டானங்கள் நடத்தப்பட்டன.
ஆண்டு நிறைவு நாளில், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களுக்கு 2 வது (தொ) கஜபா படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், அவர் ஒரு மா மரக்கன்றை நட்டு, குழு படம் எடுத்து பின்னர் படையினருக்கு உரையாற்றினார்.
அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்து, அதைத் தொடர்ந்து அனைத்து நிலையினருக்கான மதிய உணவு மற்றும் மாலை இசை நிகழ்வுடன் அன்றைய ஆண்டு நிறைவு சம்பிரதாயங்கள் நிறைவடைந்தன.