போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

பிரிகேடியர் பி.ஏ.பீ. லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள், 2025 ஒக்டோபர் 30, அன்று இராணுவத் தலைமையகத்தில் போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.

அவர் தனது உரையில், போர்வீரர்கள், போரில் உயிர் நீத்த பணியாளர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் உயிரிழந்த படையினரின் குடும்பங்களை ஆதரிப்பதில் பணிப்பகத்தின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார், தற்போதைய நலன்புரி மற்றும் புனர்வாழ்வு திட்டங்களை வலுப்படுத்துவதாக உறுதியளித்தார்.

பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.