31st October 2025
இலங்கை இராணுவ சிவில் ஊழியர் நலன்புரி நிதிய சங்கத்தின் வருடாந்த கூட்டம் 2025 ஒக்டோபர் 31 அன்று கொழும்பு பொது நூலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
வருகை தந்த இராணுவத் தளபதியை இராணுவ சிவில் ஊழியர் நலன்புரி நிதிய சங்கத்தின் தலைவி திருமதி திலினி தர்மதாச மற்றும் ஏனைய விருந்தினர்கள் அவரை அன்புடன் வரவேற்றனர்.
இந்த நிகழ்வின் போது, சிவில் ஊழியர்களின் பிள்ளைகளின் உயர் கல்வியை தொடர பல உதவித்தொகைகள் வழங்கப்பட்டன, மேலும் புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேடிபீடி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்கள் மற்றும் சிவில் நிர்வாக பணிப்பகத்தின் உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.