31st October 2025
இலங்கை இராணுவ சேவைப் படையணி தனது 76வது ஆண்டு நிறைவை 2025 ஒக்டோபர் 30 அன்று பனாகொடை படையணி தலைமையகத்தில் மிக சிறப்பாக கொண்டாடியது.
கொண்டாட்டங்களுக்கு இணையாக, படையணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் மற்றும் கரப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன, அதனைத் தொடர்ந்து 2025 ஒக்டோபர் 25 அன்று பனாகொடை ஸ்ரீ மகா போதிராஜராம விகாரையில் போர்வீரர் நினைவு அனுஷ்டிப்பு மற்றும் தானம் வழங்கலும் இடம்பெற்றது.
ஆண்டு நிறைவு நாளில், இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேடிபீடி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டது.
அணிவகுப்பின் போது, சர்வதேச நிகழ்வுகளில் படையணி மற்றும் இராணுவத்திற்கு பெருமை சேர்த்த இலங்கை இராணுவ சேவைப் படையணியின் விளையாட்டு வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர், இதில் உலக இராணுவ விளையாட்டு பேரவை 'நைட்ஹூட்' கௌரவிப்பு வழங்கப்பட்ட மேஜர் ஆர்பிஎன் ரத்நாயக்கவும் அடங்குவர்.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், படையணி படைத் தளபதி மரக்கன்று நாட்டியதுடன், குழு படம் எடுத்து கொண்டார். பின்னர் அனைத்துப் நிலையினருடன் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்.
ஆண்டு விழா கொண்டாட்டங்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.