31st October 2025
9 வது இலங்கை பீரங்கிப் படையணி மற்றும் 3 வது பொறியியல் சேவைகள் படையணி படையினரால் செவனப்பிட்டிய சாம விஹாரையில் ஒரு புதிய அறநெறிப் பாடசாலை கட்டிடத்தின் கட்டுமானத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து 2025 ஒக்டோபர் 26 அன்று அவர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதியும் இலங்கை பீரங்கி படையணி தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உதவி செயலாளரும் இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியுமான திருமதி விந்தியா பிரேமரத்ன அவர்களுடன் கலந்து கொண்டார்.
தரணா அறக்கட்டளையின் உப தலைவி திருமதி சுரேகா கார்ட்னரின் நிதி பங்களிப்பின் மூலம் இந்தக் கட்டுமானம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மதகுருமார்கள், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.