30th October 2025
கேணல் ஆர்ஏஎன்பீ ரணவீர (ஓய்வு) அவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையில் சுகவீனம் காரணத்தால் 2025 ஒக்டோபர் 29, அன்று காலமானார். இறக்கும் போது அவருக்கு 55 வயது ஆகும்.
மறைந்த சிரேஷ்ட அதிகாரியின் உடல் இறுதி மரியாதைக்காக, 2025 ஒக்டோபர் 30 முதல் அவரது இல்லமான 1143/25, ஆசிரி உயன, மாலபே வீதி, கட்டுகுருந்த, கொட்டாவையில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது இறுதிச் கிரியைகள், முழு இராணுவ மரியாதையுடன் 2025 நவம்பர் 01, அன்று பிற்பகல் 3.00 மணிக்கு கொட்டாவை பொது மயானத்தில் இடம்பெறும்.