இராணுவத்தினரால் மாணவர்களுக்கு பாடசாலை உதவிபொருட்கள் வழங்கல்

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் இயங்கும் 24 வது காலாட் படைப்பிரிவின் 242 வது காலாட் பிரிகேடினால் ஏற்பாடு செய்யப்பட்ட அத்தியாவசிய பாடசாலை பொருட்கள் வழங்கல் திட்டம், 2025 ஒக்டோபர் 24 அன்று அம் / பானம மகா வித்தியாலயத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்த நிகழ்விற்கு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள சிங்கள மன்ற தலைவரும் மொரட்டுவையைச் சேர்ந்தவருமான திரு. காமினி கீர்த்திசந்திர அவர்கள் நிதியுதவி வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு பாடசாலைகளை சேர்ந்த 100 மாணவர்கள் அத்தியாவசியப் பாடசாலை பொருட்களைப் பெற்றனர்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் கலந்து கொண்டார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அரச அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.