ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

மேஜர் ஜெனரல் கே.ஏ.டி.எஸ்.கே. தர்மசேன ஆர்டபிள்யூபீ அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 ஒக்டோபர் 24 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2000 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கைகளின் போது பார்வையை இழந்தும், அர்ப்பணிப்பு மற்றும் மீள்தன்மையுடன் தொடர்ந்து பணியாற்றி வருகின்றார். இது இராணுவத்தின் அனைத்து நிலையினருக்கும் அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்திற்கு ஒரு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக அமைகின்றது.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:

மேஜர் ஜெனரல் கே.ஏ.டி.எஸ்.கே. தர்மசேன ஆர்டபிள்யூபீ அவர்கள் 1991 மே 09 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தரப் படையில் குறுகிய பாடநெறி 2 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர், 1992 ஜூன் 06 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை கவச வாகனப் படையணியில் நியமிக்கப்பட்டார். தனது இராணுவ பணிக்காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர், 2025 ஒக்டோபர் 10 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2025 நவம்பர் 01 ஆம் திகதி தனது 55 வயதை அடைந்ததும் நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார்.

சிரேஷ்ட அதிகாரி தனது பணிக்காலத்தில், 3 வது இலங்கை கவச வாகன புலனாய்வு படையணியின் படைத் தலைவர், 1 வது கஜபா படையணியின் குழுத் தலைவர், 5 வது (தொண்டர்) இலங்கை சிங்க படையணியின் குழுத் தலைவர், 3 வது இலங்கை கவச வாகன புலனாய்வு படையணியின் ‘ஏ’ குழுவின் படைத் தலைவர், கவச வாகன பயிற்சி நிலையத்தின் பயிற்றுவிப்பாளர், 5 வது இலங்கை கவச வாகன புலனாய்வு படையணியின் ‘ஏ’ குழுவின் படைத் தலைவர், 5 வது இலங்கை கவச வாகன புலனாய்வு படையணியின் துனை நிறைவேற்று அதிகாரி, 5 வது இலங்கை கவச வாகன புலனாய்வு படையணியின் தொழில்நுட்ப நிறைவேற்று அதிகாரி, 5 வது இலங்கை கவச வாகன புலனாய்வு படையணியின் நிறைவேற்று அதிகாரி, 5 வது இலங்கை கவச வாகன புலனாய்வு படையணியின் ‘சீ’ குழுவின் அதிகாரி கட்டளை, இலங்கை கவச வாகன படையணி புலனாய்வு குழுவின் அதிகாரி கட்டளை மற்றும் கவச வாகன பிரிகேட் தலைமையகத்தின் பணிநிலை அதிகாரி 1 ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

இலங்கை இராணுவத்திற்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு மற்றும் வீரம் மிக்க சேவையைப் பாராட்டி, அவருக்கு ரண விக்ரம பதக்கம் (ஆர்டபிள்யூபீ) விருது வழங்கப்பட்டுள்ளது.

அவர் உள்நாட்டு இயந்திர போக்குவரத்து அதிகாரிகள் பாடநெறி மற்றும் பாகிஸ்தானில் இளம் அதிகாரிகள் (கவச) பாடநெறி ஆகியவற்றை பயின்றுள்ளார்.

அவர் திருமதி தரங்கனி தர்மசேன அவர்களை மணந்தார், தனது பார்வைக் குறைபாட்டை முழுமையாக உணர்ந்து, மகத்தான தைரியம் மற்றும் தியாகத்திற்கு எடுத்துக்காட்டாக, திருமணத்தில் அவருக்கு ஆதரவாக நிற்கத் தேர்ந்தெடுத்த ஒரு குறிப்பிடத்தக்க பெண்மணி.