24th October 2025
இராணுவத் தலைமையகத்தில் போர்வீரர்கள் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஏ.எஸ்.ஆர் விஜேதாச டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 ஒக்டோபர் 23 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:
மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஏ.எஸ்.ஆர் விஜேதாச டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 1990 ஜனவரி 17 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தரப் படையில் பாடநெறி 33 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர், 1992 ஜூன் 15 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை கவச வாகனப் படையணியில் நியமிக்கப்பட்டார்.
தனது இராணுவ பணிக்காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர், 2025 ஒக்டோபர் 10 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2025 ஒக்டோபர் 29 ஆம் திகதி தனது 55 வயதை அடைந்ததும் நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். ஓய்வு பெறும் போது இராணுவத் தலைமையகத்தில் போர்வீரர்கள் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகிக்கின்றார்.
சிரேஷ்ட அதிகாரி தனது பணிக்காலத்தில், 1 வது இலங்கை கவச வாகன புலனாய்வு படையணி மற்றும் 4 வது கவச வாகன புலனாய்வு படையணியின் படைத் தலைவர், 4 வது கவச வாகன படையணியின் தொழில்நுட்ப நிறைவேற்று அதிகாரி, 4 வது கவச வாகன படையணியின் அதிகாரி கட்டளை, கவச வாகன படையணி தலைமையத்தின் பணிநிலை அதிகாரி 3, கவச வாகன பிரிகேடின் தொழில்நுட்ப நிறைவேற்று அதிகாரி, யக்கலை ரணவிரு ஆடை தொழிற்சாலையின் உற்பத்தி முகாமையாளர் (முடிக்கும் துறை), இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பணிநிலை அதிகாரி 2 (கல்வியாளர்கள்), இலங்கை இராணுவ தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் பயிற்றுவிப்பாளர், யக்கலை ரணவிரு ஆடை தொழிற்சாலையின் சிரேஷ்ட உற்பத்தி முகாமையாளர், இராணுவத் தலைமையகத்தில் நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயற்பாடுகள் – இணை), கவச வாகன பயிற்சி நிலையத்தின் தளபதி, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பயிற்றுவிப்பாளர், இராணுவத் தலைமையகத்தில் பயிற்சி பணிப்பகத்தின் கேணல் (பயிற்சி), இராணுவப் பயிற்சி தளபதி பிரிகேடியர் (கோட்பாடு & உத்தி), தேசிய பாதுகாப்பு கல்லூரி செயலாளர், தேசிய பாதுகாப்பு கல்லூரியின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் (இராணுவம்), பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பிரதித் தளபதி மற்றும் போர்வீரர்கள் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளதுடன், தற்போது போர்வீரர்கள் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகிக்கின்றார்.
இலங்கை இராணுவத்திற்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு மற்றும் வீரம் மிக்க சேவையைப் பாராட்டி, அவருக்கு வீர விக்ரம விபூஷண (டபிள்யூடபிள்யூவீ), ரண சூர பதக்கம் (ஆர்எஸ்பீ) மற்றும் உத்தம சேவா பதக்கம் (யூஎஸ்பீ) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இராணுவ கட்டளை மற்றும் பணிநிலையாளர் பாடநெறி மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி உட்பட ஏராளமான உள்நாட்டு பாடநெறிகளை அவர் பயின்றுள்ளார்.
அவர் இளம் அதிகாரிகள் (கவச) பாடநெறி - பாகிஸ்தான், வாகன பயிற்றுவிப்பாளர் அதிகாரிகள் பாடநெறி - இந்தியா, போர் குழு தளபதி பாடநெறி - இந்தியா, பாதுகாப்பு இணைப்பு வழிகாட்டல் பாடநெறி - சுவிட்சர்லாந்து, மற்றும் சர்வதேச பாதுகாப்பு பாடநெறியில் தலைமைத்துவம் போன்ற வெளிநாட்டு தொழித்துறை பாடநெறிகளையும் கற்றுள்ளார்.
சிரேஷ்ட அதிகாரி இலங்கையின் பீனிக்ஸ் ஆடை தொழில்நுட்பக் கல்லூரியில் ஆடை உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப சான்றிதழ், பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில் தொழில்முறை இராஜதந்திரம் மற்றும் உலக விவகாரங்களில் டிப்ளோமா, கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனிதவள முகாமைத்துவத்தில் முதுகலை டிப்ளோமா மற்றும் மனிதவள முகாமைத்துவத்தில் முதுகலை பட்டம் ஆகியவற்றையும் பெற்றுள்ளார். மேலும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா பல்கலைக்கழகத்தில் சர்வதேச மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பில் மேம்பட்ட படிப்புகளில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.