இராணுவத்தினரால் வெடிபொருள் ஆபத்து தொடர்பான விழிப்புணர்வுத் திட்டம்

2025 ஒக்டோபர் 19ஆம் திகதி, 7வது பொறியியல் படையணியின் ஏற்பாட்டில் சேருநுவர 215 எப் நலன்புரி சமூக நிலையத்தின் கிராம மக்களுக்காக வெடிபொருள் ஆபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வு, சேருநுவர கிராம சேவையாளர் பிரிவின் கிராம சேவையாளரின் கோரிக்கையின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டது.

வெடிக்காத வெடிபொருட்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அப்பகுதியில் காணப்படும் சந்தேகத்திற்கிடமான வெடிபொருட்களைப் பற்றி விழிப்புடன் இருத்தல், அவற்றை அடையாளம் காணுதல் மற்றும் உடனடியாகத் தகவல் அளிப்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது இந்த முயற்சியின் நோக்கமாகும். பல்வேறு வகையான வெடிபொருள் ஆபத்துகள், பாதுகாப்பான நடத்தை முறைகள் மற்றும் அவை கண்டுபிடிக்கப்பட்டால் உள்ளூர் அதிகாரிகள் அல்லது இலங்கை இராணுவத்திடம் எச்சரிக்கை வழங்குவதற்கான சரியான நடைமுறைகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விளக்கப்பட்டது.

இந்த அமர்வில் செயல்விளக்கங்கள், வீடியோ விளக்கக்காட்சிகள் மற்றும் முந்தைய சம்பவ எடுத்துக்காட்டுகள் ஆகியவை இடம்பெற்றன. பூநகர் கண்ணிவெடி அகற்றும் தளத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வரும் பொறியியல் சிப்பாய்களால் இந்த நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.