22nd October 2025
திட்ட பணிப்பகம் அதன் அதிகாரிகளுக்கு "துல்லியமான தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் உருவாக்குதல்" என்ற தலைப்பில் ஒரு பட்டறையை இராணுவத் தலைமையக பல்லூடக மண்டபத்தில் 2025 ஒக்டோபர் 17 ஆம் திகதி நடாத்தியது.
இந்த அமர்வை தர உறுதி மற்றும் ஆய்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எல்எஸ்டிஎன் பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் நடாத்தினார். இந்த முயற்சியின் நோக்கம், விசேட விவரக்கோவைகள் உருவாக்கும் நுட்பங்களைப் பூரணமாக புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம் இராணுவ கொள்முதல் செயல்முறைகளின் மொத்த தரத்தையும் செயல்திறனையும் மேம்படுத்துவதாகும்.