21st October 2025
23 வது காலாட் படைப்பிரிவின் 232 வது காலாட் பிரிகேடின் கட்டளையின் கீழ் இயங்கும் 4 வது கெமுனு ஹேவா படையணி படையினரால், கோமாதுரை வடக்கில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்திற்கு ஒரு புதிய வீடு கட்டப்பட்டது.
இந்த திட்டத்திற்கு சர்வதேச சிறுவர்கள் அவசர நிவாரண அமைப்பு நிதியுதவி வழங்கியது. இந்த வீட்டை கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ. பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள், சர்வதேச சிறுவர்கள் அவசர நிவாரண அமைப்பின், இந்தியாவின் பணிப்பாளரும் இலங்கையின் பதில் தலைவருமான திரு. நிதின் டொங்க் அவர்களுடன் இணைந்து 2025 ஒக்டோபர் 15 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக பயனாளியிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.