இராணுவப் புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், சட்டவிரோத மாத்திரைகள் வைத்திருந்த சந்தேக நபர் கைது

இராணுவப் புலனாய்வுப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வவுனியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து வவுனியா மூன்றுமுறிப்பில் 2025 ஒக்டோபர் 19 ஆம் திகதி ஒரு சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது, ரூ. 53,850,000.00 பெறுமதியான ப்ரீகபலின் மாத்திரைகளை ஒரு வாகனதினுள் மறைத்து கொண்டு சென்றபோது ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மொத்தம் 359,000 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கற்பிட்டி மண்டலக்குடாவைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸ் நிலையம் மேற்கொண்டு வருகின்றது.