16th October 2025
கஜபா படையணி அதன் 42 வது ஆண்டு நிறைவை 2025 ஒக்டோபர் 14 ஆம் திகதி கஜபா படையணி தலைமையகத்தில் தொடர்ச்சியான மத மற்றும் சம்பிரதாய நிகழ்வுகளுடன் கொண்டாடியது.
இந்த நிகழ்வுகள் 2025 ஒக்டோபர் 3 ஆம் திகதி கொடிக்கான சர்வ பல ஆசிர்வாதத்துடன் ஆரம்பமாகின, அதனைத் தொடர்ந்து 2025 ஒக்டோபர் 12 ஆம் திகதி இரவு முழுவதும் பிரித் பாராயணத்துடன், மகா சங்க உறுப்பினர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. 2025 அக்டோபர் 13 ஆம் திகதி படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ. உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் வீரமரணமடைந்த போர் வீரர்களின் நினைவாக படையணியின் நினைவுத்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், வீரமரணமடைந்த போர் வீரர்களின் 62 பெற்றோர்கள், உடன்பிறப்புகள் மற்றும் வாழ்க்கைத் துணைவர்களும் இந்நிகழ்வின் போது தங்கள் மரியாதையை செலுத்தினர்.
ஆண்டு நிறைவு நாளில், படையணியின் படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் படையணியின் "ஸ்தாபக தந்தை" மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்களின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், படையணியின் படைத் தளபதி சம்பிரதாய அணிவகுப்பை ஆய்வு செய்தார். நிகழ்வின் நினைவாக ஒரு மரக்கன்று நடப்பட்டதுடன், குழுப்படம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அனைத்து நிலையினருக்குமான மதிய உணவுடன் அன்றைய நுகழ்வுகள் நிறைவடைந்தன. இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.