14th October 2025
இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 2025 ஒக்டோபர் 11 ஆம் திகதி ஜயவர்தனபுர பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் அதிகாரிகளுடன் இணைந்து களனிப் பிரதேசத்தில் சோதனை ஒன்றை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையின் போது, களனி பிரதேசத்தில் வசிக்கும் ஒரு நபர் ரூ. 1,560,000.00 பெறுமதியான சட்டவிரோத 87 மென்செஸ்டர் சிகரெட் பக்கட்டுகள் (17,400 சிகரெட்டுகள்) மற்றும் ஒரு மோட்டார் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களனி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.