76 வது இராணுவ தினத்தை முன்னிட்டு இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு நிலை உயர்வுகள்

2025 ஒக்டோபர் 10 ஆம் திகதி நடைபெற்ற 76 வது இராணுவ தின கொண்டாட்டங்களுக்கு இணங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ ஆகியோரின் பரிந்துரையின் அடிப்படையில், அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்களினால் ஐந்து பிரிகேடியர்களுக்கு நிலை உயர்வு வழங்கப்பட்டது. அவர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையை அங்கீகரிக்கும் விதமாக ரண விக்ரம பதக்கமும் வழங்கப்பட்டது. இந்த அதிகாரிகள் உத்தியோகப்பூர்வமாக மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.

இராணுவத் தலைமையகத்தில் 2025 ஓக்டோபர் 12 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வின் போது நிலை உயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்களுக்கான அதிகார சின்னங்களை வழங்கினார்.

மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஏ.எஸ்.ஆர் விஜயதாச டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, மேஜர் ஜெனரல் ஈ.என் குருகுலசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ, மேஜர் ஜெனரல் எம்.ஏ.டி.ஜே.டி குணதிலக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, மேஜர் ஜெனரல் கே.ஏ.டி.எஸ்.கே தர்மசேன ஆர்டபிள்யூபீ மற்றும் மேஜர் ஜெனரல் சீ.எஸ் திப்போட்டுகே ஆகிய சிரேஷ்ட அதிகாரிகள் மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டனர்.

தளபதி அலுவலகத்தில் உத்தியோகப்பூர்வ சின்னம் வழங்கும் நிகழ்வு மற்றும் குழுப்படம் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் விழா நிறைவடைந்தது.