76 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு 51 வது காலாட் படைப்பிரிவினால் ஏழை குடும்பத்திற்கு வீடு

51 வது காலாட் படைப்பிரிவின் வழிகாட்டுதல் மற்றும் 513 வது காலாட் பிரிகேடின் மேற்பார்வையின் கீழ், 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் 76 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு 2025 ஒக்டோபர் 10 ஆம் திகதி காரைநகரில் ஒரு ஏழை குடும்பத்திற்கு கட்டிய புதிய வீட்டைக் கையளித்தனர்.

51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.பீ.என்.ஏ. முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் அரச அதிகாரிகளுடன் வீடு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

மறைந்த திரு. ஹெர்பட் அழகரத்தினம் அவர்களின் நினைவாக வன்னி எய்ட் கனடாவின் நிதி உதவியுடன், 68 வது ஜோ-பெட் வகுப்பின் நண்பர்கள், மேஜர் ஜெனரல் ரவி ரத்னசிங்கத்தின் (ஓய்வு) ஒருங்கிணைப்பில் இத்திட்டத்தை மேற்கொண்டனர்.