7th October 2025
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் இலங்கை கண் தான சங்கத்துடன் இணைந்து 2025 ஒக்டோபர் 02 ஆம் திகதி ஒரு சிறப்பு கண் மருத்துவ முகாமை நடாத்தினர். பார்வைக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட 364 வறிய பொதுமக்களுக்கு முக்கிய மருத்துவ உதவிகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுக்கு கண் பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் கண் பராமரிப்பு குறித்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
இந்த முயற்சியை 561 வது காலாட் பிரிகேடின் மேற்பார்வை மற்றும் 16 வது இலங்கை சிங்க படையணி படையினரின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது.