2nd October 2025
இலங்கை இராணுவத்தினர், 2025 செப்டம்பர் 27 ஆம் திகதி கருகம்பனை சனசமூக நிலையத்தில் தேவையுள்ள குடும்பங்களைச் சேர்ந்த எண்பது பிள்ளைகளுக்கு பாடசாலை பொருட்களை விநியோகித்தனர்.
இரத்தினபுரி, சிறிதேவானந்த பிரிவேனாவின் பிரதி பிரிவேணாதிபதி வண.ஓபநாயக்க சுசிம தேரர் இந்த முயற்சிக்கு நிதியுதவி வழங்கினார். 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.பி.என்.ஏ. முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ, யாழ்ப்பாண வலயக் கல்வி பணிப்பாளர் திரு. நோர்பர்ட் உதயகுமார் மற்றும் பாடசாலை அதிபர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.