76 வது இராணுவ ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்களுக்கு முன்னதாக இராணுவத் தளபதி அபிமன்சல - 1 நல விடுதிக்கு விஜயம்

வரவிருக்கும் 76 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 செப்டம்பர் 26 அன்று அனுராதபுரத்தில் உள்ள ‘அபிமன்சல – 1’ நல விடுதிக்கு சென்று புனர்வாழ்வு பெறும் போர் வீரர்களின் நலன் விசாரித்தார்.

வருகை தந்த இராணுவ தளபதியை போர் வீரர்கள் போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் டப்ளியூ.ஏ.எஸ்.ஆர் விஜேதாச டப்ளியூடப்ளியூவீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி மற்றும் ‘அபிமன்சல – 1’ நல விடுதி தளபதி பிரிகேடியர் பி.ஏ.பீ லியனகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆகியோருடன் வரவேற்றனர்.

பின்னர் இராணுவத் தளபதி காயமடைந்த போர் வீரர்களுடன் மதிய உணவு விருந்தில் கலந்துக்கொண்டார். தொடர்ந்து இராணுவ தளபதி போர் வீரர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகளை வழங்கினார்.

‘அபிமன்சல – 1’ இன் தளபதியால் இராணுவ தளபதிக்கு நினைவுப் பரிசு வழங்கலுடன் அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்தன. பின்னர், இராணுவத் தளபதி விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டதுடன் குழு படம் எடுத்துக்கொண்டார்.

இந் நிகழ்வில் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, முதன்மை பணிநிலை அதிகாரிகள், பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.