26th September 2025
கொஸ்குலன ஆரம்ப பாடசாலை நூலகத்திற்கு 2025 செப்டம்பர் 23 அன்று இராணுவத்தினர் சுமார் 470 வாசிப்புப் புத்தகங்களை நன்கொடையாக வழங்கினர். கற்றல் மூலம் 'தூய இலங்கை' திட்டத்தை ஆதரிப்பதோடு, பிள்ளைகளின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி பிரிகேடியர் வை.எம்.எஸ்.சீ.பி. ஜயதிலக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.