தேசிய கடற்கரை தூய்மைபடுத்தல் வாரத்தை முன்னிட்டு, தூய இலங்கை திட்டத்திற்கு இணங்க, 2025 செப்டம்பர் 20, அன்று பாணந்துறை கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வினை இராணுவப் படையினர் நடத்தினர். பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) தம்மிக்க பட்டபெந்தி அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
கடலோர சூழல்களைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக கடல் பாதுகாப்பு அமைப்பால் அறிமுகப்படுத்தப்பட்ட சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தும் தினத்திற்கு இணையாக இந்த முயற்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் போது, படையினரும் தன்னார்வலர்களும் பாணந்துறை கடற்கரையின் கணிசமான பகுதியை சுத்தம் செய்து, நீர் வளத்தை பாதுகாப்பதற்கும், கடல் வளக் குறைவைத் தடுப்பதற்கும், மாசுபாட்டைக் குறைப்பதற்கும் பங்களித்தனர்.
கடற்படை, வான் படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், மாணவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் இந்த முயற்சியில் பங்கேற்றனர்.