18th September 2025
லெப்டினன் கேணல் எஸ்.டி. பீரிஸ் யூஎஸ்பீ பீஎஸ்சி (ஓய்வு) அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ ஆர்எஸ்பீ சிடீஎப்-என்டியூ பீஎஸ்சி ஐஜீ அவர்களை சந்தித்து, அவர் எழுதிய “எனது கமாண்டோ படையணியுடனான பயணம்” என்ற புத்தகத்தை 2025 செப்டம்பர் 09 அன்று இராணுவத் தலைமையகத்தில் வழங்கினார்.
இலங்கை இராணுவத்தின் முன்னோடித் தலைவராகவும் தொலைநோக்காளராகவும் லெப்டினன் கேணல் சுனில் தயாள் பீரிஸ் கருதப்படுவதுடன் இலங்கை இராணுவ காமண்டோ படையணியின் நிறுவனர் மற்றும் படையணியின் வடிவமைப்பு கலைஞராகவும் கருதப்படுகின்றார். தனது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கை முழுவதும், இராணுவத்தின் திறன்களை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க செயல்பாட்டு மற்றும் மூலோபாய பங்களிப்புகளை அவர் செய்துள்ளார்.