16th September 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள இரணைப்பளை மைதானத்தில், 59வது காலாட் படைப்பிரிவினரால் 2025 செப்டம்பர் 10ஆம் திகதி கால்பந்து போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திரு. ஏ. உமாமகேஸ்வரனுடன் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராக நிகழ்வில் கலந்து கொண்டார்.
முல்லைத்தீவு அலையோசை விளையாட்டுக் கழகம் மற்றும் உடுப்புகுளம் உதயம் விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.
அலையோசை விளையாட்டுக் கழகம் சாம்பியன் பட்டத்தை வென்றதுடன், உதயம் விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. முதல் மூன்று அணிகளுக்கும் கிண்ணங்கள், சான்றிதழ்கள், பரிசுப் பொதிகள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், போட்டி முழுவதும் சிறப்பாகச் செயல்பட்டவர்களை அங்கீகரிக்கும் வகையில் தனிப்பட்ட விருதுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.