16th September 2025
இலங்கை சமிக்ஞை படையணியில் "மின்னணு பாதுகாத்தல்" என்ற கருப்பொருளின் கீழ், 2025 செப்டம்பர் 12 அன்று பனாகொடை இலங்கை சமிக்ஞை படையணியில் அதிகாரிகள் உணவகத்தில் 9வது இலங்கை சமிக்ஞை படையணி மற்றும் 12வது இலங்கை சமிக்ஞை படையணியுடன் இணைந்து ஏற்பாடு செய்த சைபர் பாதுகாப்பு மற்றும் மின்னணு போர் தொடர்பான விரிவுரை நடாத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் தலைமை சமிக்ஞை அதிகாரியும் இலங்கை சமிக்ஞை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜீஎல்எஸ்டபிள்யூ லியனகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இவ் விரிவுரை வளர்ந்து வரும் சைபர் மற்றும் மின்னணு போர் சவால்கள் தொடர்பான உரையாடலுக்கான ஒரு தளத்தை வழங்கியது, இதில் திரு. லக்மல் எம்புல்தெனியா, திரு. லசந்த பிரியங்கர, திரு. ஷெர்வின் ஜான்சே, கேணல் பிபீ உடகே யூஎஸ்பீ மற்றும் லெப்டினன் கேணல் எஎம்சீகே அத்தபத்து யூஎஸ்பீ போன்ற நிபுணர்கள் தலைமையிலான நான்கு அமர்வுகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் 71க்கும் மேற்பட்ட சமிக்ஞை அதிகாரிகள் பங்கேற்றனர், அதே நேரத்தில் 75 தகவல் பாதுகாப்பு அதிகாரிகள் மெய்நிகர் மூலம் இணைந்து கொண்டனர்.