13th September 2025
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கம் பிரதிநிதிகள் குழு, வீரமரணம் அடைந்த அனைத்து போர் வீரர்களையும் நினைவுகூரும் வகையில் எதிர்வரும் பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுக்கு 2025 செப்டெம்பர் 12 ஆம் திகதி தளபதியின் அலுவலகத்தில் பொப்பி மலர் அணிவித்தது.
இந்த ஆண்டு நினைவு தினம் இன்னும் சில நாட்களில் தொடங்குவதைக் குறிக்கும் வகையில், இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் பிரதிநிதிகள் பொப்பி குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் எல்.எம். முதலிகே (ஓய்வு) அவர்கள் இராணுவத் தளபதிக்கு பொப்பி மலர் அணிவித்தார்.
நிர்வாக முகாமையாளர் பிரிகேடியர் எஸ்.ஜே.எம்.ஏ.ஆர். செனவிரத்ன (ஓய்வு), பொப்பி குழுவின் பொருளாளர் மேஜர் டபிள்யூ.சீ. டி சில்வா (ஓய்வு) மற்றும் பொப்பி குழுவின் பல உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
முதலாவது உலகப் போரின் முடிவில் இருந்து,பொதுநலவாய உறுப்பு நாடுகள் உட்பட, உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பொப்பி தினம் நினைவுகூரப்படுகிறது. இது, கடமையின் போது தங்கள் உயிரைத் தியாகம் செய்த ஆயுதப் படைகளின் உறுப்பினர்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.