பணியாளர் கடமைகள் பணிப்பாளர் கடமைபொறுப்பேற்பு

இலங்கை கவச வாகன படையணியின் பிரிகேடியர் ஆர்.ஆர்.எம்.பீ.என்.பி பம்பரதெனிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சீ அவர்கள் 2025 செப்டம்பர் 10 அன்று இராணுவத் தலைமையகத்தில் பணியாளர் கடமைகள் பணிப்பகத்தின் 40 வது பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.

பிரிகேடியர் பி.ஏ.டி.ஆர்.ஏ.சி விஜயசேகர ஆர்எஸ்பீ யுஎஸ்ஏசிஜிஎஸ்சி அவர்களுக்கு பிறகு இவர் பதவியேற்கிறார். இந்த நிகழ்வில் பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.