லெபனானில் நடந்த முதல் ஐக்கிய நாடுகள் படைவீரர்களுக்குச் சொந்தமான உபகரண ஆய்வில் 16 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு சிறந்து விளங்கல்

2025 ஜூலை 04 ஆம் திகதி கடமைகளை ஏற்றுக்கொண்ட 16 வது இலங்கை பாதுகாப்பு படைக் குழு, அதன் முதல் படைவீரர்களுக்குச் சொந்தமான உபகரண ஆய்வுக்கு உட்பட்டது. லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையைச் சேர்ந்த 18 அதிகாரிகள் கொண்ட குழுவால், இந்த ஆண்டுக்கான 3 வது காலாண்டு படைவீரர்களுக்குச் சொந்தமான உபகரண ஆய்வு 2025 செப்டம்பர் 04 ஆம் திகதி நகோராவில் உள்ள ஸ்ரீ தளத்தில் நடாத்தப்பட்டது.

இந்த ஆய்வு நிறைவான முடிவுகளுடன் வெற்றிகரமாக நிறைவடைந்ததுடன் லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை குழுவால் எந்த அவதானிப்புகளும் எழுப்பப்படவில்லை. இது நிறுவனத்தின் செயற்பாட்டுத் தயார்நிலை மற்றும் உபகரணப் பராமரிப்பின் உயர் தரத்தை பிரதிபலிக்கிறது.

இந்த சாதனை 16 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு பணிப் பொறுப்புகளில் ஒரு நேர்மறையான தொடக்கத்தைக் குறிப்பதுடன் இது ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் அமைதி காக்கும் முயற்சிகளுக்கு இலங்கையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.