இலங்கை இராணுவத்தினரால் நீர் சுத்திகரிப்பு நிலையம் நிர்மாணிப்பு

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக, 'ராண்டியா' நீர் சுத்திகரிப்பு திட்டம் 2025 மே 30ஆம் திகதி நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. கோஹோம்பன் குளம் கிராமத்தில் நிர்மானிக்கப்பட்ட புதிய சுத்திகரிப்பு நிலையம் 2025 ஆகஸ்ட் 26ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.எம்.எல். சமரதிவாகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். கலாநிதி ஆரியரத்னம் கோபிகிருஷ்ணா அவர்களின் நிதியுதவி மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் 1 மற்றும் 9 வது படையலகு படையினரின் மனிதவளத்தால் இந்த திட்டம் சாத்தியமானது.

இந்த திட்டத்தை மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ரவி ரத்னசிங்கம் அவர்கள் ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அரச அதிகாரிகள் மற்றும் கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.